நன்றி சொல்லி பாடுவேன் ( Nandri solli paaduven
நன்றி சொல்லி பாடுவேன்நாதன் இயேசு நாமத்தையே
நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவை போற்றுவேன்
நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே
1. கடந்த நாட்கள் முழுவதும் என்னை
கண்ணின் மனிபோல் காத்தாரே
கரத்தை பிடித்து கைவிடாமல்
கனிவாய் என்னை நடத்தினாரே - நல்ல
2. துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
சூழ்ந்து என்னை நெருக்கினாலும்
கண்மலை தேவன் என்னோடு இருக்க
கலக்கம் இல்லை என் வாழ்விலே
3. மேகங்கள் மீது மன்னவன் இயேசு
வேகம் வருவார் ஆனந்தமே
கண்ணீர் துடைத்து பலனை கொடுக்க
கர்த்தாதி கர்த்தர் வருகிறாரே
4. எரிகோ போன்ற எதிர்ப்புகள்
எதிராய் வந்து எழும்பினாலும்
சேனையின் கர்த்தர் என் முன்னே
செல்கிறார் என்று பயப்படேனே
Post a Comment