நன்றி நன்றி நன்றி இராஜா (Nandri nandri nandri raja
நன்றி நன்றி நன்றி இராஜாநன்றி நன்றி நன்றி தேவா (2)
உமக்கு நன்றி சொல்வதைத் தவிர
வேறே மேன்மை என் வாழ்வில் இல்லை
1.கண்ணின் மணிபோல் என்னைக் காத்தீர்
காலமெல்லலாம் நடத்துகிறீர்
உமது அன்பால் நித்தம் மகிழ்வேன்
உமது தயவால் தினமும் வாழ்வேன்
2.ஆபத்தில் என்னோடு இருப்பவர் நீரே
கேடகமாய் என்னைக் காப்பவர் நீரே
உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேனே
உம்மாலே மதிலைத் தாண்டிடுவேனே
3.அன்போடு என்னை அணைக்கின்றீரே
ஆறுதலாக தேற்றுகின்றீரே
தகப்பனை போல்
ஆற்றுகின்றீர்
தாயைப் போல் தேற்றுகின்றீர்
Post a Comment