Paaduvom magizhvom

பாடுவோம் மகிழ்வோம் (Paaduvom magizhvom


பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்

1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே நன்றி - 3

2. துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்கும் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்;தானையா
என் பிரியமும் நீர்தானையா நன்றி - 3

3. கல்வாரி சிலுவையினால்-என்
சாபங்கள் உடைந்ததையா
ஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்கு கிடைத்ததையா நன்றி - 3

4. இயேசுவே உம் இரத்ததால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து உம்
அன்பை ஊற்றினீரே - நன்றி - 3

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes