Neethimaan naan neethimaan

நீதிமான் நான் நீதிமான் (Neethimaan naan neethimaan


நீதிமான் நான் நீதிமான் நான்
இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் - இயேசுவின்

1.பனைமரம்போல் நான் செழித்தோங்குவேன்
கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்
கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு
முதிர்வயதிலும் நான் கனிதருவேன் - நீதிமான்

2.காலையிலே உம் கிருபையையும்
இரவினிலே உம் சத்தியத்தையும்
பத்துநரம்புகள் இசையோடு
பாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்

3.ஆண்டவனே என் கற்பாறை
ஆவரிடம் அநீதியே இல்லை
என்றே முழக்கம் செய்திடுவேன்
செழுமையும் பசுமையுமாய் வளர்வேன்

4.ராஜாவின் ஆட்சி வருகையிலே
கதிரவனைப் போல் பிரகாசிப்பேன் - இயேசு
ஆகாயமண்டல விண்மீனாய்
முடிவில்லா காலமும் ஒளிவீசுவேன்

5.எதிரியின் வலிமையை மேற்கொள்ள
அதிகாரம் எனக்குத் தந்துள்ளார்
புதுஎண்ணை அபிஷேகம் என் தலைமேல்
பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர்

6.கர்த்தரின் கண்கள் என்மேலே
என் வேண்டுதல் கேட்கின்றார்
மன்றாடும்போது செவிசாய்த்து
மாபெரும் விடுதலை தருகின்றார்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes