Paadum paadal yesuvukaai

பாடும் பாடல் இயேசுவுக்காக {Paadum paadal yesuvukaai 

பாடும் பாடல் இயேசுவுக்காக
பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே

1.அழகென்றால் அவர் போலே
யார் தான் உண்டு இந்த லோகத்தில்
வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
என் உள்ளம் மகிழ்வாகுதே  -  பாடும்

2.அன்பினிலே என் நேசருக்கே
என்றென்றுமே இணையில்லையே
என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார்
என் நேசர் அன்பில் மகிழ்வேன்   -  பாடும்

3.தெய்வம் என்றால் இயேசுதானே
சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
என் பொன் நேசரின் மார்பில் சாய்ந்தோனாக
நான் பாடுவேன் பாமாலைகள்    -   பாடும்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes