போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் {Potriduvom pugazhnthiduvom
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே
1.தந்தையைப் போல் தோளினிலே
மைந்தரெமைச் சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தை நாம் துதித்துடுவோம்
2.கன மகிமை புகழுடைய
கருணையாய் ஜெநிப்பித்ததாலே
கனலெரியின் சோதனையில்
கலங்கிடுமோ எம் விசுவாசமே
3.ஞாலமெல்லாம் கண்ட திசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இணைத்தனரே நம்மைத் தம்
சுதராய் - போற்
4.ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியோரை ஸ்திரப் படுத்தி
சேதமில்லா ஜெயமளித்த
கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே
5.சீயோனே மா சாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தில் - போற்
Post a Comment