Pagal nera paadal neere


பகல் நேரப் பாடல் நீரே {Pagal nera paadal neere


பகல் நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோசமும் நீரே
நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்

1.எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய்க் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும்
மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானய்யா
மணவாளரே உம்மை மறவேன் [2]

2.தாய் மடி தவழும் குழந்தை போல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன்

3.கவலைகள் பெருகி கலங்கும் போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால்

4.பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes