Nithiya raja nirmala naathaa


நித்திய ராஜா நிர்மல நாதா {Nithiya raja nirmala naathaa


நித்திய ராஜா நிர்மல நாதா
நின் பாதம் பணிந்தேன் இவ்வேளை

என் மன இராஜ்ஜியத்தில்
என்றும் அரசாளுகின்ற
இராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
இயேசு மகா ராஜாவுக்கே ஸ்தோத்திரம்

1.கண்ணயர்ந்த வேளையிலும்
கண்ணிமைப் போல் காத்தவரே
கற்பகமே உமக்கு ஸ்தோத்திரம்
கண் விழித்த வேளையிலும் கண்மேல்
உம் கண் வைத்து
கருத்தாய் போதித்தவா ஸ்தோத்திரம்

2.இப்பகல் வேளையிலும் எப்பக்கம்
சூழ்ந்து நிற்கும்
இம்மானுவேலனை ஸ்தோத்திரம்
உம்முடனே நான் இணைய
என்னுடனே நீர் பிணைய
வாழ்ந்திடும் வாழ்வுக்காய் ஸ்தோத்திரம் 

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes