ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் {Aarathippen naan manaalan
ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன்
என் ஆண்டவர் இயேசுவையே அனுதினமே
ஆனந்த கீதத்தால் அவர்
நாமம் போற்றியே
அனுதினம் ஸ்தோத்தரிப்பேன்
என் இயேசுவை
1.தூத சேனை போற்றும் தூயாதி தூயனை
துதிகளின் மத்தியிலே வாசம்
செய்யும் நேசனை
ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை
தினம் தினம் ஸ்தோத்தரிப்பேன்
என் இயேசுவை
2.அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து
அன்னிய பாஷையிலே அவரோடே பேசி
நன்மையால் என் வாழ்வை
நாள்தோறும் நடத்தும்
நாதனை ஸ்தோத்தரிப்பேன்
என் இயேசுவை
Post a Comment