Potri thuthippom

போற்றி துதிப்போம் எம் தேவதேவனை {Potri thuthippom

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா 
இயேசுவை நாம் என்றும் பாடி துதிப்போம்

    இயேசு என்னும் நாமமே -என்
   ஆத்துமாவின் கீதமே
    நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்

1.கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரம் கொண்டு
மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன் - இயேசு

2.யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே பாதுகாத்த
அன்பை என்றும் பாடுவேன் - இயேசு

3.தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து ஜீவ
பாதை என்றும் ஓடுவேன் - இயேசு

4.பூமியகிலமும் சாட்சிகளாகவே
போங்க ளென்ற கட்டளையதால்
ஆவி , ஆத்துமாவும் தேகம் யாவுமின்று
ஈந்து தொண்டு செய்குவேன் - இயேசு

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes