Raajaathi raajavai

இராஜாதி இராஜாவை (Raajaathi raajavai

இராஜாதி இராஜாவை
கொண்டாடுவோம்
நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம்  - நம்

1. வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழ வைக்கும் தெய்வம்தானே இயேசு
என்னை வழிநடத்தும் தீபம் தானே இயேசு  அந்த

2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் அந்த

3. வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே
அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லிச் சொல்லி முறியடிப்பேன்  நம்

4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண் முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார்  அவர் கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்                             

5. முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார்
என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார் 

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes