Kartharai thuthiyungal

கர்த்தரைத் துதியுங்கள் (Kartharai thuthiyungal

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது

1.ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்,
உண்டாக்கி மகிழ்ந்தாரே

இன்று போற்றிப் புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் (2)

2.பகலை ஆள்வதற்கு,
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உருவாக்கினார்

3.செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச்செய்தார்
பார்வோனையும் படைகளையும்
அதிலே மூழ்கடித்தார்

4.வனாந்திரப் பாதையில்,
ஜனங்களை நடத்திச் சென்றார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக்கொண்டார்

5.தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
உடல் கொண்ட அனைவருக்கும்
உணவு ஊட்டுகிறார்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes