Ummai pugazhnthu paaduvathu

உம்மை புகழ்ந்து பாடுவது (Ummai pugazhnthu paaduvathu

உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
அது இனிமையானது ஏற்புடையது

1.பாடல்கள் வைத்திர் ஐயா
பாலகர் நாவிலே
எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
இவ்வாறு செய்தீரய்யா
உந்தன் திருநாமம்
அது எவ்வளவு உயர்ந்தது – 2

2.நிலாவை பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது
என்னை நினைத்து விசாரித்து
நடத்த நான் எம்மாத்திரமையா

3.வானதூதனை விட சற்று
சிறியவனாய் படைத்துள்ளீர்
மகிமை மாட்சிமை மிகுந்த
மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்

4.அனைத்துப் படைப்புகள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்
காட்டு விலங்குகள் மீன்கள்
பறவைகள் கீழ்படியச் செய்துள்ளீர்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes