சின்னஞ் சிட்டு குருவியே {Sinna sittu kuruviye
சின்னஞ் சிட்டு குருவியே [2] உன்னை
சந்தோசமாஉ படைச்சது யாரு
அங்கும் இங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாக பாடுறியே - உன்னை
அழகாக படைச்சது யாரு
ஐயோ [2] இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்
2.சின்னஞ் சிட்டு குருவியே [2] உன்னை
சிறகை எனக்கும் தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு 2
உல்லசமாய் பறப்பதற்கு ஒரு
உதவி எனக்கு செய்திடுவாயா
ஐயோ இனிமே அப்படி கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்ட கோபிச்சிக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா - அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்
3.ஆமாம் சிட்டுக் குருவியே [2]
இதுவும் எங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
ல ... ல ... ல... ல...
Post a Comment