ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் {Sthotharippen sthotharippen
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேனே
1.உதடுகளின் கனியாகிய
ஸ்தோத்திரப் பலியை
யேசுவின் நாமத்தினாலே
செலுத்துகின்றேன் யான்
2.பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள்
தோய்த்ததினாலே
3.என்னுடைய காயங்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய் தீர்த்ததினால்
ஸ்தோத்தரிப்பேன் யான்
4.ஆகாயத்து பட்சிகளை போஷிக்கும் தேவன்
தினமும் என்னை போஷிப்பதால்
ஸ்தோத்தரிப்பேன் யான்
5.நாளையத் தினம் ஊன் உடைக்காய்
என் சிந்தைகளைத்
கவலையற்ற தாக்கினால்
ஸ்தோத்தரிப்பேன் யான்
6.சீக்கிரமாய் வந்திடுவேன்
என்றுரைத்தானே
சீக்கிரமாய் காண்பதினால்
ஸ்தோத்தரிப்பேன் யான்
Post a Comment