Theva janame paadi thuthippom

தேவ ஜனமே பாடி துதிப்போம் {Theva janame paadi thuthippom

தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றிடுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரில் களித்திடுவோம்

1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனை துதித்திடுவோம்
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனைத் துதித்திடுவோம்

2. வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றுமே காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனைத் துதித்திடுவோம்

3. கர்த்தர் நாமம் ஓங்கி படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராம்சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம்

4. தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம்

5. நமது போரை தாமே முடித்து
ஜெயமே என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes