சுந்தரப் பரம தேவ மைந்தன் (Sunthara parama theva mainthan
சுந்தரப் பரம தேவ மைந்தன்இயேசு கிறிஸ்துவுக்கு
தோத்திரம் புகழ்ச்சி நித்திய
கீர்த்தனம் என்றும்
அந்தரம் புவியும் தந்து , சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார்:
நம்மை ஒன்றாய் கூட்டினார்: அருள் முடி
சூட்டினார்:
கிருபையால் தேற்றினாரே, துதி
1.பாதகப் பசாசால் வந்த தீதெனும்
பாவத்தால் நொந்த
பாவிகளான நம்மை உசாவி மீட்டாரே
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசுவாச வீட்டாரே,
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் பவத்துயர் போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள்
பாடுங்கள் என்றும்
2. விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப்
பணிந்து போற்றவே
மண்ணிலுள்ள ஜாதிகளும்
நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே
அண்ணலாம் பிதாவுக்கொரே
புண்ணிய குமாரனைக் கொண்டாடிட
அவர்பாதம் தேடிட
வெகு திரள் கூடிட
துதிபுகழ் பாடிடப் பாடிட என்றும்
3. சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர்களுங் கிருபை
தங்கி வாழவே
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதானமாக வாழவே,,
உத்தம போதகர்களும் சத்யதிருச்சபைகளும்
உயர்ந்து - வாழதீயோன்
பயந்து - தாழ மிக
நயந்து
கிறிஸ்துவுக்கு ஜெயந்தான்
நயந்தான் என்றும்
Post a Comment