Theva aasirvaatham pergiduthe

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே {Theva aasirvaatham pergiduthe

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க

1.எழும்பு சீயோனே ஒளி வந்ததே
எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருள் கடந்திடுதே
கர்த்தரின் பேரொளி வீசிடுதே  -  தேவ

2.நலமுடன் நம்மை இதுவரையும் 
நிலை நிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணி போல் கடைசி வரை 
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் 

3.குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய்திறப்போம்

4.தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் நாம் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்  

5.பெருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes