தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் {Theva sabaiyile thevan eluntharuzhvaar
தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே
பரன் இயேசு உலாவுகிறார்
1.பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில்
ஏந்தியே துதிப்போம் - தேவ
2.ஆபத்து நாளில் அரணும் கோட்டை
நித்திய கண்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே
3.இராப்பகலாய் தன் கண்மணி போல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்
4.உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர்
5.சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த
இயேசு நமக்குண்டே
6.ஓசன்னா ! பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜெ ! ஜெயராஜனுக்கு
ஜெயம் முழங்கிடுவோம்
Post a Comment