தேவன் என் பெலனே (Thevan en pelane
தேவன் என் பெலனே
தேவன் அடைக்கலமே
ஆபத்துக் காலத்திலே அநுகூலத் துணையே
1.பகலிலே வெயிலாகிலும்
இரவிலே நிலவாகிலும்
கர்த்தரின் கிருபை
என்னில் சேதப்படுத்தாதே
2.அமர்ந்து தேவன் என்று
கர்த்தரை அறிவேனே
ரதங்களை முறிப்பாரே
யுத்தங்கள் ஓய்ந்திடுமே
3.ஒரு வழியாய் வருவார்
ஓடுவார் ஏழு வழி
எனக்கெதிராயுதங்கள்
என்றும் வாய்க்காதே
4.சிறுமைப் பட்டவரின்
ஜெபத்தைக் கேட்டருளி
சகாயம் செய்வாரே
இருதயம் ஸ்திரப்படுமே
5.கர்த்தரை நேசித்து
அவர் வழி நடப்போரை
பரிசுத்த ஜெப வீட்டில்
மகிழப் பண்ணுவாரே
6.பரிசுத்த இரத்தத்தினால்
பரிசுத்தமாக்கி விட்டார்
பாவச் சுமைகளெல்லாம்
பரமன் சுமந்து விட்டார்
7.கண்ணீரைத் துடைத்திடுவார்
கவலையை தீர்த்திடுவார்
கன்மலைமேல் உயர்த்தி
காலமெல்லாம் காப்பார்
Post a Comment