Thevanukke magimai

தேவனுக்கே மகிமை-Thevanukke magimai


தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க - ஐயா  2

1.உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் - இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் - ஐயா

2.செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் - இந்தப்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே - ஐயா

3.எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே - எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே - ஐயா

4.தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் - இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே

5.குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே - பாவக்
கறைப்போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே - ஐயா

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes