Thinam thinam yesu nayaganai

தினம் தினம் இயேசு நாயகனை { Thinam thinam yesu nayaganai

தினம் தினம் இயேசு நாயகனை
மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்
மகிழ்ந்து பாடுவேன்

 ஆனந்தமாக என் நேசர் மார்பில் 
அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்  - தினம்

1.கருவில் என்னைத் தெரிந்து கொண்டு
கருத்தாய் அவரை பாட வைத்தார்  -  ஆன

2.வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்துச் சென்றார்

3.மன்னர் இயேசு என்னுள் இருக்க 
மனிதன் எனக்கு என்ன செய்வான்   -  ஆன

4.அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
அல்லேலூயா பாடுகிறேன்   -  ஆன

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes