Thivviya anbin saththathai

திவ்விய அன்பின் சத்தத்தை-Thivviya anbin saththathai


திவ்விய அன்பின் சத்தத்தை ரட்சகா
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவா

ஆவல் கொண்டிதோ வந்தேன்
இன்னும் கிட்டக் கிட்டச்
சேர்த்துக் கொள்ளுமென்
பாடுபட்ட நாயகா
இன்னும் கிட்டக் கிட்டச்
சேர்த்துக் கொள்ளுமென்
ஜீவன் தந்த ரட்சகா

2.என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமென்
உம்மை வாஞ்சையோடெந்தன்
உள்ளத்தில் நாடித் தேடச் செய்யுமேன்

3.திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய் சந்தோசமாகிறேன் - இன்

4.இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்விய அன்பின்
ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன் - இன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes