Thulluthaiya um naamam

துள்ளுதைய்யா உம் நாமம் {Thulluthaiya um naamam 

துள்ளுதைய்யா உம் நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா

1.அன்பு பெருகுதையா - உம்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபினேசர் பார்வையிலே

2.உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே

3.நம்பிக்கை வளருதையா 
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே

4.நோய்கள் நீங்குதையா - உம்மை
நோக்கிப் பார்க்கையிலே
பேய்கள் அலறுதையா
பெரியவர் நாமத்திலே

5.கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes