Thuthi eduthal saathan oduvaan

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் ( Thuthi eduthal saathan oduvaan


துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
முறுமுறுத்தால் திரும்பி வருவான்

துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்

1. டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை
கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது

2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான்

3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம்

4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
கட்டளை பிறந்தது போனான் நினிவே

5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்

6. கர்த்தரை நம்புவோம் அவர் நம்மை தாங்குவர்
வார்த்தையை நம்புவோம்
வருமே விடுதலை

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes