உள்ளம் ஆனந்த கீதத்திலே {Ullam aanantha geethaththile
உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்
1.பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே - உள்ளம்
2.மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைவிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார்
3.உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே
Post a Comment