Unnathamanavar sarva vallavar

உன்னதமானவர் சர்வ வல்லவர் {Unnathamanavar sarva vallavar

உன்னதமானவர் சர்வ வல்லவர்
நிகரில்லாத நித்தியமுமானவர்
சாவை வென்று உயிர்த்தவர்  -  முழு
அகிலம் வணங்கும் தேவரீர்
எம் நினைவாய் இருப்பவர்
இயேசுவே ஆண்டவர் 
பாடு! பாடு! கொண்டாடு!
கர்த்தரின் உத்தமம் மாபெரிது
மகிழ்ந்து பாடு கொண்டாடு
தலைமுறைதோறும் தொடருமது
அந்தமில்லாமல் நிலைக்குமது

1.ஆபிரகாமை பெயர் சொல்லி அழைத்தவர்
உண்மையுள்ளவர்
ஊர்விட்டு வாவெனக் கூட்டிச் சென்றவர் 
உத்தமம் அணிந்தவர்
காடை, மன்னா, மதுரமான நீர்,
தந்தவர் அற்புதர் 
கானான் நாட்டைச் சேரும் வரையிலும்
துணையாய் வந்தவர் 
நீர் ஆதரவானவர்  - 2

2.அற்புதமான ஆரம்பம் எதையும் 
அலட்சியம் செய்யாதவர்
திடமனம் தைரியம் பெலன் தரும் நீரே
அதிசயமானவர்
குழவிகள் அனுப்பி எதிரியைத் துரத்தி 
ஜெயத்தைத் தந்தவர்
அர்ப்பணம் நித்தமும் தொடர்கின்ற போது
உயர்வை அளிப்பவர்
நீர் ஒப்பில்லாதவர்  -  2

3.காலங்கள் தோறும் செயல்படும்
நீரே சரித்திர நாயகர்
வாலிபர் , அரிவு , மேதைகள் உள்ளம் 
கொள்ளை கொள்பவர்
அகண்ட இப்பூமி முழுதும் வாழ்பவர்
இதயம் கவர்ந்தவர்
மா திரளாய் தம் சீடர்கள் பெருக்கிடும்
நீரே நல்லவர் 
நீர் என்றும் வல்லவர்  -  2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes