வந்தனம் வந்தனமே (Vanthanam vanthaname
வந்தனம் வந்தனமே தேவ துந்துமி கொண்டிதமே இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே மிகத் தந்தனம்1. சந்ததஞ் சந்ததமே எங்கள் தகு நன்றிக் கடையாளமே
நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து
சரணஞ் செய்கையில் தயை கூர் சுரர் பதியே
2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே
எங்கள் சாமி பணிவாய் நேமதித்,
துதிபுகழ் தந்தனமே நிதமே!
3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே,
சத்ய சருவேசுரனே கிருபாகரனே
உன் சருவத்துக்குந் துதியே
4. உந்தன் சருவ ஞானமும் எங்கள்
உள்ளந்திரியம் யாவையும்
பார்த்தால் ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே
5. மாறாப் பூரணனே எல்லா வருடங்களிலும் எத்தனை
உந்தன் வாக்குத் தவறா தருளிப்
பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே
Post a Comment