Seeresu naathanukku

சீரேசு நாதனுக்கு (Seeresu naathanukku


சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம், ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்குப்
பரம பொற்பாதனுக்குப்
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்குச்

1.ஆதி சருவேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு, உயர் மனுவேலனுக்குச்

2.மானாபிமானனுக்கு வானனுக்கு மங்களம்:
வளர் கலைக் கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்
கானான் நற்தேயனுக்கு
கன்னிமரி சேயனுக்கு
கோனார் சகாயனுக்கு, கூறுபெத்த லேயனுக்கு

3.பத்து லட்சணத்தனுக்குச், சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்கு சருவாதிகாரனுக்கு
பத்தர் உபகாரனுக்கு பரம குமாரனுக்கு

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes