Paadi thuthi maname

பாடித் துதி மனமே (Paadi thuthi maname


பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி மனமே
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து

1.தீர்க்கதரிசிகளைக் கொண்டு
முன்னுறச் செப்பின் தேவபரன்
இந்த காலத்தில்
மார்க்கமதாக குமாரனைக் கொண்டு
வழுத்தின அன்பை விழைந்து தியானித்து

2.சொந்த ஜனமாக யூதரைத் இருந்திட
தொலையில் கிடந்த புறஜாதியாம் எமை
மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்திற்காக

3.எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes