வரவேணும் எனதரசே (Varavenum enatharase
வரவேணும் எனதரசே,
மனுவேல், இஸ்ரவேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா,
அசரீரி ஒரே சருவேசா!
1.வேதா, கருணாகரா, மெய்யான பராபரா,
ஆதாரநிராதரா, அன்பான சகோதரா,
தாதாவும் தாய் சகலமும் நீயே:
நாதா, உன் தாபரம் நல்குவாயே
2.படியோர் பவ மோசனா,
பரலோக சிம்மாசனா,
முடியாதருள் போசனா, முதன் மாமறைவாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்
3.வானோர் தொழும் நாதனே
மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே: நடுநிலை யோவா,
நண்பா, உனத நன்மையின் மகா தேவா!
Post a Comment