Yekovayeere thanthaiyaam

Tags :  Umakkaga thane aiya ,Yaar vendum naathaa neerallavo,Ummai aaraathippathe en aasai

யோகோவாயீரே தந்தையாம் (Yekovayeere thanthaiyaam


1.யேகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யேகோவா ரப்பா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யேகோவா ஷம்மா என்கூட இருப்பீர்
என் தேவை எல்லாம் சந்திப்பீர்
நீர் மாத்ரம் போதும் - 3 -எனக்கு

2. யேகோவா ஏலோயீம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யேகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
யேகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்திலே - நீர்

3. இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என் மேல் எவ்வள வன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும் - நீர்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes