Aarathanai intha velai

ஆராதனை இந்த வேளை ( Aarathanai intha velai

ஆராதனை இந்த வேளை
ஆண்டவரைத் தொழும் காலை
துதியுடனே ஸ்தோத்தரிப்போம்
தூயவரே தொழுதிடுவோம்

1.ஆவியுடன் நல் உண்மையுடன்
ஆராதிப்போம் அவர் நாமத்தையே
கூடிடுவோம் பணிந்திடுவோம்
கல்வாரி அன்பினை பாடிடுவோம்

2.திரு ரத்தத்தால் மீட்பர் சம்பாதித்த
திருச்சபையில் தினம் கூடிடுவோம்
தவறாமல் வேதம் ருசி பார்த்திட
திருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம்

3.மெய் சமாதானம் கிருபையோடு
மாறாத மீட்பர் மகிமையோடு
மாசற்ற பேரின்ப அன்பினிலே
மறுரூபடைந்து பறந்திடுவோம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes