ஆயிரம் நாவுகள் போதா ( Aayiram naavugal potha
ஆயிரம் நாவுகள் போதா
ஆண்டவர் உந்தனை பாட
கணக்கில்லா நன்மைகள் செய்தீர்
கர்த்தர் உம்மை போற்றிப் பாட
1.காலமெல்லாம் உந்தன் அன்பால்
கரம் பிடித்தென்னை நடத்தி
காத்த உம் கிருபையை நினைத்தே
கர்த்தா உம்மைப் போற்றிப் பாட
2.அலை மோதியோடும் படகாய்
அலைந்த என்னை அன்பால் மீட்டிர்
ஆணிகள் பாய்ந்த உம் கைகள்
ஆண்டு நடத்தும் உம் அன்பால்
3.அன்பாக என்னை அழைத்தீர்
கனமான சேவையை தந்தீர்
ஆயுள் முழுவதும் துதிகள்
ஆயிரமாய் சொல்லி வாழ்வேன்
Post a Comment