Neerindri vaazhvethu iraiva

நீரின்றி வாழ்வேது இறைவா (Neerindri vaazhvethu iraiva


நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தலைவா
உலகத்தில் நூறு ஆண்டு
நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும்
ஒரு நாளே போதும் - நீரின்றி

1.பலகோடி வார்த்தைகள்
நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும்
ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே

2.கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும்
அசையதைய்யா
உம் துணையின்றி
உயிர் வாழ முடியாதைய்யா

3.எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயா
அதில் எதற்கென்று
நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல
வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போததைய்யா

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes