அநாதியாய் எந்தன் அடைக்கலம் (Anaathiyaai enthan adaikalam
அநாதியாய் எந்தன் அடைக்கலம் நீரே
அநாதி நேசத்தால் நேசித்தோர் நீரே
அநாதி சிறகின் மறைவில் வந்தடைந்தே
அநாதி காலமாய் சுகிப்பேனே
1.ஜீவனின் பெலனும் இயேசுவே நீர்
சீயோனில் ராஜனும் இயேசுவே நீர்
சுத்திகரிப்பீரே இயேசுவே உமக்காய்
சேவிக்க எந்தன் ஜீவ காலமெல்லாம்
2.வறண்ட கானகமாம் இந்த புவியே
இருண்ட பாதையே நான் கடந்திடவே
நிறைவின் தேவனே குறைகளகற்றுவீர்
நிறைந்த நதியாய் தாகந் தீர்ப்பீர் - ஜீவ
3.சிலுவை நோக்கியே உம் அடி தொடர
வல்லமை தாருமே இயேசுவே எனக்கே
நேசிக்க இகத்தில் வேறொரும் அறிகிலேன்
நீரின்றி பரத்தில் யாருமில்லை - ஜீவ
4.தேவனின் சித்தமே செய்ய வந்தனீரே
தேகமாம் திரையதை
ஒழித்து சென்றனீரே
நாதனே உமது சித்தந்தனை செய்யவே
வேதனே அருள்வீர் கிருபையே
5.என் கண்கள் நோக்கிடுதே
எப்போ வருவீர்
என் ஆவல் தீருமே உம் முகம் காண்க
மகிமை இலங்கும் சீயோனின் மலையதில்
மாட்சியில் இயேசுவோடாட்சி செய்வேன் - ஜீவ
Post a Comment