சர்வ வல்லவரைப் போற்றி (Sarva vallavarai potri
சர்வ வல்லவரைப் போற்றிப்
பாடுவோம் - நாம்
போற்றிப் பாடுவோம் - நாம்
இன்றுமென்றுமாய்
சென்ற நாளெல்லாம் நம்மைக்
காத்திட்டாரே
சர்வ வல்லவரைத் துதித்திடுவோம்
எல்லாக் கனம் மகிமையும் அவர்க்கே
நாம் செலுத்திடுவோம் நாம்
செலுத்திடுவோம்
எல்லாத் துதிக்கும் நாள் பாத்திரரை
நாம் சேர்ந்து போற்றிடுவோம்
1.பாவப் பாரத்தால் இளைத்திருந்த
என்னைப் பரன் தேடினீரோ
என்னைத் தேற்றவே
பூவில் எங்கும் காணாப் பேரின்ப
இளைப்பாறுதலைப் பெற்றிடச் செய்தீர்
2.மாய லோக அன்பில்
மாண்டிருந்த என்னை
மா தயவால் மீட்டுக் கண்டெடுத்தீரே
மெல்கிசேதேக்கின் அபிஷேகத்தினால்
எந்தன் உள்ளம் இளைப்பாற செய்தீரே
3.நிந்தை பரிகாசம் பாடு சகித்தோராய்ப்
பாளையப் புறம்பே தள்ளப்பட்டோராய்
நம் பிதாவின் சித்தம் செய்திடவே
இளைப்பாறுதல் நமக்கீந்தனரே
4.யோர்தானைப் போலத்
துன்பம் எதிர்த்தாலும்
யோசுவாவின் தேவன் நம்மோடிருப்பதால்
யோர்தானின் கற்கள் நின்றது போல்
நிற்போம் இளைப்பாறித் தைரியமாய்
5.சீயோன் ராஜன் வானில்
வேகம் வருவதால்
அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போமே
அன்பர் இயேசு நேசர் நமக்காய்
ஆவலோடு எதிர்நோக்கி நிற்கிறார்
Post a Comment