Magibanaiye anuthiname

மகிபனையே அனுதினமே (Magibanaiye anuthiname


மகிபனையே அனுதினமே
மகிழ்வுடனே துதித்திடுவேன் - தினம்

1.என்னை அன்பில் இணைத்திடவே
கண்டீர் பூவுருவாகும் முன்னே
ஜோதியாய் தேவ மகிமையைப்
பெறவே தேவன் என்னைத்
தெரிந்தெடுத்ததினால் - மகிபனை

2.தூதராலும் செய்ய வொண்ணா
தூய பணியை அற்புதமாய்
தூசி யானும் செய்திடக் கிருபை
தூயன் கிறிஸ்து சொறிந்தனரே - மகிபனை

3.ஜீவியத்தின் போர் முடித்தே
நீதியின் கிரீடம் சூடிடுவேன்
ஜீவன் ஈந்த இயேசு நல் மேய்ப்பர்
ஜோதியின் கிரீடமும் சூட்டிடுவார் - மகிபனை

4.அழைத்தாரே சுவிஷேத்தினால்
அடைய தேவ சாயலதை
பயத்துடனே பரிசுத்தமதையே
பாரினில் பூரணமாக்கிடுவோம்

5.ஆவலுடனே காத்திருந்தே
சேவையை புரிவோம் இயேசுவுக்காய்
ஆசை இயேசு மணவாளனாய் வருவார்
சீயோனில் எம்மைச் சேர்த்திடவே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes