Ennai sutrilum yesu undu

என்னை சுற்றிலும் இயேசு உண்டு (Ennai sutrilum yesu undu


என்னை சுற்றிலும் இயேசு உண்டு
என் முன்னே செல்கின்றாரே - 2
ஆராதனை - 4

1.பார்வோன் வந்தால் என்ன
பெரும் படையோடு வந்தால் என்ன - 2
ஜெபித்திடுவேன் ஜெயம் எடுப்பேன்
செங்கடல் பிரிந்திடுமே - 2 ஆராதனை

2.பாலைவனம் வந்தால் என்ன
என்னை படைத்தவர் என்னோடு உண்டு - 2
பாடிடுவேன் பாதை காட்டிடுவார்
பயணத்தை தொடர்ந்திடுவேன் - 2

3.மகிமையின் தேவன் நீரே
மன்னாவை தருகின்றீரே - 2
மறவாத எபிநேசரே
என் மனமகிழ்ச்சி நீர்தானையா - 2

4.வாக்குத்தத்தம் செய்தவரே
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவீர் - 2
உம்மையே நான் நம்பியுள்ளேன்
உம் கிருபை சூழ்ந்து கொள்ளும் - 2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes