Jeyam kodukkum thevanukku

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு {Jeyam kodukkum thevanukku 

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு 
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு 
வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம் 

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

1.நீதியின் கரத்தினால் தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன்
எதற்குமே அஞ்சிடேன்

2.அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார்

3.நம்பிக்கை தேவனே
நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பிய
மகிமைப்படுத்துவார்

4.உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவரே
என்னை காப்பவர் உறங்குவதில்லையே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes