Kalimannaiyum oru karuviyaakki

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி (Kalimannaiyum oru karuviyaakki

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்
துதி கனம் மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான்

1.ஒன்றுக்கும் உதவாத என்னை அழைத்தீர்
உன்னத அன்பால் என்னை நேசித்தீர்
இராஜாக்களாக மாற்றி விட்டீர்
ஆசாரியர்களாக மாற்றி விட்டீர்

2.உளையான சேற்றில் இருந்த என்னை
மாறாத நேசத்தால் எடுத்தீர் ஐயா
அபிஷேகத்தால் என்னை நிறைத்து விட்டீர்
அபிஷேகப் பாத்திரமாய் மாற்றி விட்டீர்

3.அதிசயமாய் என்னை நடத்துகிறீர்
அற்புதமாய் என்னை நடத்துகிறீர்
அதிசய குயவனே ஸ்தோத்திரம் ஐயா
அற்புத நாயகனே ஸ்தோத்திரம் ஐயா

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes