Kartharukkul kalikoornthu magizhkiren

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் (Kartharukkul kalikoornthu magizhkiren


கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
ஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்

ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு - 2

1.பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு

2.பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு

3.நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு

4.நேசக்கொடி என்மேலே பறக்குதையா என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா

5.கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு - என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes