Sthothirathodae paaduvom

ஸ்தோத்திரத்தோடே பாடுவோம் {Sthothirathodae paaduvom


 ஸ்தோத்திரத்தோடே பாடுவோம்
துதி பலியோடே சேருவோம்
பரிசுத்த அலங்கார அழகுடன்
அவரை ஏற்றுவோம்
துதி சாற்றுவோம்

1.தம்புரு வீணையுடன்
கர்த்தரைப் பாடுவோம் -2
எக்காலமும் மாறாதவர் - அவர்
நாமம் ஓதுவோம்
எக்காளம் ஊதுவோம் -2

2.இளமை இயேசுவுக்கே
இனிதே பாடுவோம் -2
இகபரமதிலே அகபரனவரை
அகமகிழ்ந்தே பாடுவோம்
ஆராதனை செய்குவோம் -2

3.ஆவியால் பாடுவோம்
கருத்தோடும் பாடுவோம்-2
கரம் பிடித்தவர் வழிநடத்துவார்
கைத்தாளம் போடுவோம்
களிப்போடே ஆடுவோம் -2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes