துதிப்பதற்கு சோர்ந்து போகாதே {Thuthippathrku sornthu pogathe
துதிப்பதற்கு சோர்ந்து போகாதே
நீ ஜெபிப்பதற்கு மறந்து விடாதே
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும்
தேவனுக்கு நன்றி சொல்லிடு
1.ஜெபிக்கின்ற மனிதன் தேவனிடமிருந்து
நல்ல பதில் கொண்டு வருவான்
ஜெபிப்பதினால் தேவனிடமிருந்து
ஜெயத்தைக் கொண்டு வருவான்
2.போதிக்கின்ற மனிதன்
இயேசுவிடமிருந்து
நல்ல செய்தி கொண்டு வருவான்
போதிப்பதினால் தன் தேவனுக்காய்
ஆத்ம அறுவடை செய்வான்
3.துதிக்கின்ற மனிதன் பரத்தில் இருந்து
தேவனையே கொண்டு வருவான்
துதிக்கும் போது சிறையிருப்பை
உன் தேவன் உடைத்தெறிவார்
Post a Comment