உம்மை நம்புகிறேன் (Ummai nambukiren
உம்மை நம்புகிறேன்
நன்றி சொல்லுகிறேன் நல்லவரே நடத்துமையா - 2
1.தாழ்மையில் இருந்த என்னை
தகப்பனே கண்ணோக்கினீர்
தலை குனிந்த என்னை
நிமிர்ந்து நடக்கச் செய்தீர்
2.துன்பத்தில் துவண்ட என்னை
தூக்கி சுமக்கிறீர்
துணையாளர் நீர் தானே
என் மணவாளர் நீர்தானே
3.உம்மையே தேடி வந்தேன்
உம்மையே நேசிக்கிறேன்
உம் முகம் நான் பார்த்து
உலகத்தை மறக்கணுமே
4.உறைவிடம் நீர் தானே
என் மறைவிடம் நீர் தானே
என் ஏக்கம் நீர் தானே
என் எல்லாமே நீர் தானே
5.தாயினும் மேலாக
தகப்பனே அன்பு வைத்தீர்
உம் மடியில் தவழுகிறேன்
உம் தோளில் சாய்கிறேன்
6.பூமியின் கூடாரம்
ஒழிந்தே போகுமைய்யா
நித்திய பரலோகம்
என் நேசரே போதுமைய்யா
Post a Comment