Vaazhnathaalum thaalnthaalum

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் (Vaazhnathaalum thaalnthaalum


வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் உயர்ந்தாலும்
கர்த்தருக்குள்
மகிழ்வேன்
கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை
பிரிக்க முடியாது என்றென்றுமே - வாழ்

1.பசியோ பட்டினி வியாகுலமோ
கவலைகள் துன்பம் நேரிட்டாலும்
அன்றாடம் இயேசுவை நான்
என்றென்றும் பாடிடுவேன் - 2 - கிறி

2.வல்லமை நிறைந்த வானவரே
எனக்காய் வந்த தூயவரே
யார் என்னை கைவிட்டாலும்
என்றும்மை நான் மறவேன் - 2 - கிறி

3.காரிருள் நிறைந்திட்ட உலகிலே
பெயர் சொல்லி அழைத்த என் தேவனே
உந்தனை பின் செல்லவே
என்னையே அர்பணித்தேன் - கிறி

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes