வழியான என் தேவனே (Vazhiyana en thevane
வழியான என் தேவனே
துணையாக வருவார் என்றும்
பெளனானவர் என் அரணானவர் (2)
என்றென்றும் எனை விட்டு விலகதவர்
1.நிழல் கூட எனை பிரியும் நேரம் உண்டு
நிலையான மலை கூட விலகுவதுண்டு - 2
அசையாத அவர் கிருபை
அழியாது அவர் மகிமை - 2
அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை (2)
2.கருவில் நான் உருவான நாள் முதலாய்
கருத்தாக எனைக் காக்கும் கர்த்தர் இவர் - 2
இருள் என்னை சூழ்ந்த போதும்
ஒளியாகி துணையானவர் - 2
அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை (2)
3.முள்ளான பாதை நான் செல்லும் போதும்
கல்வாரி அனுபவந்தான் காணும் போதும் - 2
என் இயேசு உடனிருப்பார்
என் பாரம் அவர் சுமப்பார் - 2
அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை (2)
Post a Comment