Unnatha anupavathil

உன்னத அனுபவத்தில் (Unnatha anupavathil

உன்னத அனுபவத்தில் என்னை
அழைத்து சென்றிடுவீர்
தேவனே என் இயேசுவே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
பெலனே என் கோட்டையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
அல்லேலூயா (4)

1.கருவில் என்னை தெரிந்து கொண்டு
முன் குறித்தீரே  இரத்தத்தினாலே
நீதிமானாக்கி மகிமைப்படுத்தினீரே
கர்த்தாவே உந்தன் கிருபைகளாலே
என்றும் என்னை சூழ்ந்திடுவீர்
கர்த்தாவே உந்தன் இரக்கங்களாலே
நன்மையினாலே என்னை நிறைந்திடுவீர்
அல்லேலூயா (4)

2.மூன்றாம் வானம் வரையில்
என்னை எடுத்துச் சென்றிடுவீர்
தூதர்கள் பேசும்  பாஷைகள் பேசி
ஆராதிக்கச் செய்திடுவீர்
கேருபீன்கள் சேராபீன்கள்
பாடிடும் பாடலைக் கேட்டிடுவேன்
அவர்களோடு நானும் சேர்ந்து
ஆவியில் நிறைந்து பாடிடுவேன்
அல்லேலூயா (4)

3.ஆபிரகாமை அழைத்து அவரை
ஆசீர்வதித்தவரே  ரெகோபோத்தாக
ஈசாக்கைப் பலுகி பெருகச் செய்தவரே
யாக்கோபை ஆசீர்வதித்தது போல
என்னையும் ஆசீர்வதித்திடுவீர்
யோசேப்பை உயர்த்தி மகிழ்ந்தது போல
என்னையும் உயர்த்தி மகிழ்ந்திடுவீர்
அல்லேலூயா (4)

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes