இயேசுவாய் நான் வாழ வேண்டும் (Yeauvaai naan vaala vendum
இயேசுவாய் நான் வாழ வேண்டும்
இயேசுவாய் நான் மாற வேண்டும்
மாற்றும் என்னை மாற்றும்
தூய ஆவியே என்னை மாற்றும்
1.எந்தன் நினைவும் சொல்லும்
உந்தன் நினைவாய் மாற வேண்டும்
உம் ஆவி என்னில் தங்க வேண்டும்
ஆவியின் வழி நான் வாழ வேண்டும்
2.எந்தன் உணர்வுகள் எல்லாம்
உந்தன் உணர்வாய் மாற வேண்டும்
உம்மை நான் நன்கு அறிய வேண்டும்
உம் அன்பு என்னில் பெருக வேண்டும்
3.ஏழை எந்தன் இதயம்
உந்தன் இதயமாய் மாற வேண்டும்
உம் சாயல் என்னில் ஒளிர வேண்டும்
பிறர் உம்மை என்னில் காண வேண்டும்
Post a Comment