Puyal kaatrai poonthendralaai

புயல் காற்றை பூந்தென்றலாய் (Puyal kaatrai poonthendralaai


புயல் காற்றை பூந்தென்றலாய்
மாற்றிய தெய்வமே
கடல் அலை மாறி மகிழ்வுடனே
துறைமுகம் சேர்த்தீரே

1.வழி தெரியாமல் தடுமாறும் வேளை
கலங்கரை விளக்காய் வந்தீரே
தீமைகள் மாற்றி
என் சுமைகளை அகற்றி
கரையில் சேர்த்தீரே - என்னை

2.பேய் புயல் வாழ்வில் வீசின வேளையில்
அமைதியின் நண்பனாய் வந்தீரே
தேவரீர் என்னுள் இருந்ததினாலென்
தலைமயிர் ஒன்றுக்கும் சேதமில்லை

3.நொறுங்கிய நெஞ்சத்தை
சோர்ந்திட்ட வாழ்க்கையை
பெலன் தந்து மீண்டும் நடத்தினீர்
கோதுமை மணிபோல்
மடிந்த என் வாழ்வை
உயிர் பெற செய்தீரே - மீண்டும்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes